FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

21 நாள்கள் தொடர் உண்ணாவிரதம்! வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்த வாங்சுக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து...

Updated On : 18 ஜூலை 2026, 8:38 am IST
வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி - ANI
பகிர்:

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட காரணங்களுக்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜூன் 20 ஆம் தேதியில் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கினர்.

இதனிடையே, இந்தப் போராட்டத்தில் ஜூன் 28 ஆம் தேதியில் கலந்துகொண்ட சுற்றுசூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாகத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, தொடர்ந்து 21 நாள்களாக அவர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார். வாங்சுக்கின் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வரும்நிலையில், அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இதே நிலை தொடர்ந்தால் அவரின் உயிருக்கே பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். மேலும், அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தில்லி உயர் நீதிமன்றம் கூறியது.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் போராட்டக் களத்தில் 21-ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்த வாங்சுக்கை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

summary

Delhi Police takes Sonam Wangchuk to hospital after 20-day hunger strike at Jantar Mantar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments