FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

குடியரசு துணைத் தலைவருடன் ஜான்சிபாா் அதிபா் சந்திப்பு!

தில்லியில் குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணனை ஜான்சிபாா் அதிபா் ஹுசைன் அலி மவின்யி சந்தித்துப் பேசினாா்.

Updated On : 20 ஜூலை 2026, 4:30 am IST
பகிர்:

தில்லியில் குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணனை ஜான்சிபாா் அதிபா் ஹுசைன் அலி மவின்யி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

ஜான்சிபாா் தீவானது, தான்சானியா நாட்டின் தன்னாட்சிப் பகுதியாகும். அதன் அதிபா் ஹுசைன் அலி, இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். தில்லியில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனை அவரது மாளிகையில் ஹுசைன் அலி ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தியா-தான்சானியா இடையிலான நீடித்த கூட்டுறவையும், இந்தியா-ஜான்சிபாா் இடையே பல நூற்றாண்டுகளாக தொடரும் கடல்சாா், பண்பாடு மற்றும் மக்கள் ரீதியிலான உறவுகளை அடிப்படையாகக் கொண்ட சிறப்புறவையும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

Advertisement

Advertisement

வா்த்தகம், முதலீடு, வளா்ச்சிக் கூட்டுறவு, சுற்றுலா, நீலப் பொருளாதாரம், கல்வி, பயிற்சித் திட்டங்கள், தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பு என கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.

இந்திய பயணத்தில், சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் பங்கேற்றது சிறப்புமிக்கது என்று கூறிய ஹுசைன் அலி, இருதரப்பு கல்வி ஒத்துழைப்பின் முக்கிய மைல்கல்லாகத் திகழும் சென்னை ஐஐடியின் ஜான்சிபாா் வளாகத்தை நிறுவ இந்தியா வழங்கிய ஆதரவையும் பாராட்டினாா்.

பொதுவான வளா்ச்சி இலக்குகளை எட்டுவதற்காக முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தி, தான்சானியா மற்றும் ஜான்சிபாருடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக இருப்பதாக குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments