FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி!

தில்லியில் பேரணி செல்ல முயன்ற சிஜேபி கட்சியினர் மீது தடியடி...

Updated On : 20 ஜூலை 2026, 10:36 am IST
தில்லியில் இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி - PTI
பகிர்:

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த ஆதரவாளார்கள் மற்றும் இளைஞர்கள் மீது தில்லி காவல்துறை தடியடி நடத்தி வருகின்றது.

தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் சிஜேபி போராட்டம் நடத்தி வருகிறது.

தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்து வரும் நிலையில் அவர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று காலை கூடவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று கரப்பான் பூச்சி கட்சி அறிவித்திருந்தது.

இதையடுத்து, தில்லியில் நாடாளுமன்றம் சுற்றுப்பகுதிகள் முழுவதும் மத்திய அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, அசம்பாவிதங்களைத் தவிர்க்க 163 தடைச் சட்டத்தை தில்லி முழுவதும் காவல்துறையினர் நேற்று மாலை அமலுக்கு கொண்டுவந்தனர்.

தற்போது நாடாளுமன்றம் நோக்கி பேரணியைத் தொடங்கிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர்.

தடை மீறிச் செல்ல முயன்ற இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

இதனிடையே, பாதுகாப்பு கருதி மத்திய செயலகம், ஜன்பத், ராஜீவ் சௌக், படேல் சௌக் மற்றும் சேவா தீர்த்தம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், சிஜேபி கட்சியின் போராட்டம் முடக்கப்பட்டுள்ளது.

summary

CJP Protest! Police Lathi-charge on Youth and Students!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments