சிஜேபி போராட்டம்! துணை ராணுவ கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
சிஜேபி போராட்டத்தை தொடர்ந்து தில்லி முழுவதும் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது பற்றி...
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பேரணியை முன்னிட்டு, நாடாளுமன்றம் சுற்றுப்பகுதிகள் முழுவதும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் நோக்கி இன்று காலை அமைதிப் பேரணி நடத்தவுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வியாழக்கிழமை அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்தில் ஏராளமான மாணவா்கள், பெற்றோா்கள் கலந்துகொள்ள சிஜேபி அழைப்பும் விடுத்திருந்தது.
இதையடுத்து நேற்றிரவு முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணி தொடங்கவுள்ள ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் இன்று காலை தொடங்கவிருக்கும் நிலையில், இந்த பேரணிக்கு அனுமதி மறுத்திருக்கு தில்லி காவல்துறை 163 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், தில்லியில் நாடாளுமன்றம் சுற்றுப்பகுதிகள் முழுவதும் மத்திய அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஜந்தர் மந்தர் பகுதிகளை இணைக்கு சாலைகளை தடுப்புகள் வைத்து மூடியிருக்கும் காவல்துறையினர், அப்பகுதிக்கு செல்லவும், வெளியேறவும் தடை விதித்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, பாதுகாப்பு கருதி மத்திய செயலகம், ஜன்பத், ராஜீவ் சௌக், படேல் சௌக் மற்றும் சேவா தீர்த்தம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மறுஉத்தரவு வெளியாகும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் சிஜேபி போராட்டம் நடத்தி வருகிறது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சுற்றுச்சூழல் ஆா்வலா் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடா்ந்து வரும் நிலையில் அவர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
CJP Protest! Delhi under paramilitary control! Metro stations closed!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.