FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தொடரும் சிஜேபி போராட்டம்! தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது பற்றி...

Updated On : 22 ஜூலை 2026, 12:04 pm IST
தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் - PTI
பகிர்:

தில்லி கரப்பான் பூச்சி ஜனதா (சிஜேபி) கட்சியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

நீட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த முயன்ற சிஜேபி ஆதரவாளர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தினர்.

Advertisement

Advertisement

இதற்கு மத்தியில், ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வரும் சிஜேபிக்கு நாளுக்குநாள் ஆதரவு அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், சிஜேபி இன்று வெளியிட்ட அறிக்கையில், ”தில்லியில் நடந்த போராட்டம் ஒரு டிரைலர்தான். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் இன்னும் லட்சக்கணக்கானோர் தில்லிக்கு வருவார்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் உள்ள முக்கிய இடங்களுக்கு அருகேவுள்ள லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சௌக், படேல் சௌக், ராமகிருஷ்ண ஆசிரம மார்க், பாரகாம்பா சாலை, உச்ச நீதிமன்றம், சேவா தீர்த்தம், ஜன்பத், மண்டி வீடு, மத்திய செயலகம், ஐடிஓ, தில்லி கேட், இந்திரபிரஸ்தம், கான் சந்தை, ஜோர் பாக், சிவாஜி அரங்கம் ஆகிய 16 மெட்ரோ நிலையங்களை மறுஉத்தரவு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்றம், ஜந்தர் மந்தர், பிரதமர் இல்லம், குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மத்திய ஆயுதப் படை வீரர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

summary

CJP protest continues - Delhi Metro stations closed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments