FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வேன்! சோனம் வாங்சுக் வெளியிட்ட கடிதத்தில் எழுதியிருந்தது என்ன?

உண்ணாவிரதத்தை தொடரும் சோனம் வாங்சுக் வெளியிட்டுள்ள கடிதம் பற்றி...

Updated On : 20 ஜூலை 2026, 8:40 pm IST
சோனம் வாங்சுக் எழுதிய கடிதம். - படம் - எக்ஸ்
பகிர்:

நீட் முறைகேடுகளை எதிர்த்து உண்ணாவிரதத்தை தொடரும் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் இருந்தபடி, கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி கடந்த ஜூன் 20 ஆம் தேதி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தொடங்கிய போராட்டம் இன்று தீவிரமடைந்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் கடந்த ஜூன் 28 முதல் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக்கை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று தில்லியில் உள்ள சஃப்தார்ஜங்க் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். இருப்பினும் இன்றுவரை தனது உண்ணாவிரதத்தை சோனம் வாங்சுக் தொடர்ந்து வருகிறார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சோனம் வாங்சுக் வெளியிட்டுள்ள கையெழுத்தாலான கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

23 நாள்களைத் தாண்டிய நிலையில், மேலும் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வேன்.

அமைதி வழியில் போராடிவந்த இளைஞர்கள் மீது நடத்திய தாக்குதல்களைக் கண்டதால், இளைஞர்களின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் வரையில் அல்லது அவர்களை மருத்துவமனையில் நான் சந்திக்க அனுமதி அளிக்கும் வரையில் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன்.

அதற்கு முன்பாக, கல்வித்துறை அமைச்சர் பொறுப்பேற்பார் என்று நான் நம்புகிறேன். தூண்டுதல்கள் இருந்தபோதிலும், இளைஞர்கள் அமைதியைக் கடைப்பிடித்த விதம் என்னை நெகிழச் செய்துள்ளது.

மாணவர்கள் தங்கள் குறைகளை இன்றோ அல்லது நாளையோ நாடாளுமன்றத்தில் முன்வைக்க அனுமதிப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவருமாறு காவல்துறையினருக்கும் அரசாங்கத்துக்கும் நான் கோரிக்கை வைக்கிறேன்.

போராட்டக்காரர்கள் இன்று காட்டிய அதே பொறுமையை நாளையும் காட்டுவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோனம் வாங்சுக் எழுதிய கடிதம். - படம் - எக்ஸ்
summary

Sonam Wangchuk, who is continuing his hunger strike against NEET irregularities, has released a letter from the hospital.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments