நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தில்லியில் தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!
தில்லியில் போராட்டத்தையடுத்து தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்...
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
பதற்றம் காரணமாக நாடாளுமன்றத்தின் கதவு மூடப்பட்டுள்ளது, போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தால், அவர்களைக் கட்டுப்படுத்த தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய தோ்வு முகமை நடத்தும் நீட் தோ்வு உள்பட பல தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.
Advertisement
Advertisement
இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள சூழலில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று சிஜேபி அறிவித்திருந்தது.
இதையடுத்து அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில், தில்லி முழுவதும் நேற்றிரவு முதல் 163 தடைச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், தடையை மீறி பேரணியாக செல்ல முயன்ற சிஜேபி இளைஞர்களை காவல்துறையினரும், துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தி தடியடி நடத்தினர். தொடர்ந்து நாடாளுமன்றம் நோக்கி வந்த சிஜேபி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை காவல்துறையினர் வீசி கலைத்தனர்.
பாதுகாப்பு கருதி நாடாளுமன்ற வளாகத்தின் கதவுகளும் சிறிது நேரம் மூடப்பட்டன. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தால் துப்பாக்கிச்சூடு நடத்த தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். தில்லியில் சிஜேபி போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
Parliament doors closed; CISF personnel on standby in Delhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.