சிஜேபி ஆய்வு எதிரொலி: ஜெய்ப்பூர் பள்ளிக் கட்டடம் இடிப்பு! மாட்டுத் தொழுவத்தில் இயங்கி வந்த பள்ளி!
பள்ளிக் கட்டடம் மிக மோசமான நிலையில் உள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அம்பலப்படுத்தியதன் விளைவாக அந்தக் கட்டடம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது குறித்து...
பள்ளிக் கட்டடம் மிக மோசமான நிலையில் உள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் அம்பலப்படுத்தியதன் விளைவாக அந்தக் கட்டடம் புதன்கிழமை (செப். 2) இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
ஜெய்ப்பூரின் ராம்பூரா கன்வர்புரா கிராமத்தில் இருந்த அரசுப் பள்ளிக் கட்டடம் ஒன்று மிக மோசமான நிலையில் பழுதடைந்ததால் அந்தப் பள்ளியானது மாட்டுத் தொழுவத்தில் இயங்கி வந்துள்ளது.
நீட் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஸ்கூல்திக்கரோ (பள்ளிகளைச் சீரமைப்போம்) எனும் பிரசாரத்தை கடந்த மாதம் தொடங்கினர்.
Advertisement
Advertisement
இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில், அதை விடியோவாக பதிவு செய்வது, உரிய அதிகாரிகளிடம் புகார் அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஆக. 21 ஆம் தேதி ராம்பூரா கன்வர்புரா கிராமத்தில் மாட்டுத் தொழுவத்தில் இயங்கி வந்த பள்ளியை சிஜேபி செய்தித் தொடர்பாளர் அஷுதோஸ் ரங்கா தலைமையிலான குழு ஆய்வு செய்தது.
அவர்கள் ஆய்வு செய்த போது, “எங்கள் மீது கற்கள் வீசப்பட்டன, பெண்கள் தாக்கப்பட்டனர், வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. ஆனால், நம் பிள்ளைகளுக்காக ஒரு நல்ல பள்ளி கட்டப்பட்டுவிட்டால், இவையெல்லாம் வீணாகாது” என்று அஷுதோஸ் ரங்கா தனது சமுக ஊடகப் பக்கத்தில் தெரிவித்தார்.
சிஜேபியினர் அம்பலப்படுத்திய பின்னர், அந்தப் பள்ளியின் நிலைமை குறித்து செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து, அந்தப் பள்ளியின் பாழடைந்த கட்டடம் இன்று இடிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய பள்ளி கட்டுவதற்கு அரசாங்கத்தால் ஏற்கெனவே ரூ. 18 லட்சம் ஒதுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
As a result of the 'Cockroach Janata Party' exposing the dilapidated state of the school building, it was demolished.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.