FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜந்தர் மந்தருக்கு வரும் பீட்சா, பர்கர்! நாடு முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கானோரின் மனிதாபிமானம்

நாடு முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கானோரின் மனிதாபிமானம் காரணமாக ஜந்தர் மந்தருக்கு வரும் பீட்சா, பர்கர் பற்றி

Updated On : 22 ஜூலை 2026, 3:21 pm IST
Jantar Mantar protest
பகிர்:

நீட் தேர்வுக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்களுக்காக, ஜந்தர் மந்தருக்கு அடையாளம் தெரியாதவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான உணவு ஆர்டர்கள் வந்து கொண்டிருப்பது இன்னமும் நாட்டில் மனிதாபிமானம் மிச்சமிருப்பதையே காட்டுகிறது.

புது தில்லியில், ஜந்தர் மந்தரில் ஏராளமான மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு பெயர் குறிப்பிடாமல் ஏராளமான பீட்சா, பர்கர்கள் உணவு டெலிவரி செயலிகள் மூலம் கடந்த இரண்டு நாள்களாக வந்து கொண்டேயிருக்கின்றன.

நேரடியாகப் போராட்டத்துக்கு வந்து பங்கேற்க முடியாத இளைஞர்கள் பலரும், தங்களால் முடிந்ததை செய்வோம் என்று எண்ணி, இவ்வாறு ஜந்தர் மந்தர் என்று பெயரிட்டு, உணவுகளை ஆர்டர் செய்து அனுப்பி வருவதும் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த உணவு ஆர்டர்கள் அனைத்தும் தில்லியில் மட்டும் இருப்பவர்கள் மூலமாக அல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களால் ஆர்டர் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ஜந்தர் மந்தருக்கு அருகே உள்ள உணவகங்களில் ஏராளமான ஆர்டர்கள் வரப்பெறுகின்றன. ஒரு உணவு டெலிவரி செய்யும் நபர் மட்டும் கிட்டத்தட்ட 10 உணவுகளை டெலிவரி செய்திருக்கிறாராம் ஜந்தர் மந்தரில். கிட்டத்தட்ட 500 ஆர்டர்களை இதுவரை ஜந்தர் மந்தரில் கொண்டு சென்று கொடுத்திருக்கிறோம். பீட்சா, பர்கர், ஏராளமான சமோசா, சாப்பாடு, பிரியாணி என பல விதமான உணவுகள் ஆர்டர் கொடுக்கப்படுகிறதாம்.

இது தொடர்பான விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கும் நிலையில், ஒரு விடியோவில், போராடி வரும் இளைஞர்களிடம் உணவைக் கொண்டு வந்த விநியோகிப்பாளர் ஒருவர் சொல்கிறார், இந்த உணவு மும்பையிலிருந்து ஆர்டர்கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் விடியோ வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments