நான் கலைஞன்; அரசியல்வாதி அல்ல..! சிஜேபி போராட்டத்துக்குப் பதிலளித்த தில்ஜித்!
பஞ்சாபின் நட்சத்திர நடிகர் தில்ஜித் தோசன்ஜ் சிஜேபியின் போராட்டங்கள் குறித்து...
பஞ்சாபின் நட்சத்திர நடிகரும் பாடகருமான தில்ஜித் தோசன்ஜ் சிஜேபியின் போராட்டத்தில் இருந்து தான் விலகி இருப்பதாகவும், “நான் ஒரு கலைஞன்தான்; அரசியல்வாதி அல்ல” என்றும் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.
இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் 'மெய்ன் வாபஸ் ஆவுங்கா’ என்ற திரைப்படத்தில் தில்ஜித் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் (சிஜேபி) இரண்டாவது வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ விடைத்தாள் மதிப்பீட்டில் நடைபெற்ற குளறுபடி போன்றவற்றை காரணம்காட்டி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தங்களுடைய நாடுதழுவிய போராட்டத்தைத் தொடங்கினர்.
தில்ஜித் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்து வந்தார். அதில், சிஜேபியின் போராட்டம் குறித்தும் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த தில்ஜித் கூறியிருப்பதாவது:
இதெல்லாவற்றிலிருந்தும் என்னை தூரமாக வைத்திருக்கிறேன். ப்ரோ, நான் ஒரு கலைஞன்; அரசியல்வாதி அல்ல. நான் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் எனத் தெரியவில்லை.
பாருங்கள், இங்கு அனைத்துமே சரியாக இருக்காது. உலகத்தில் இருக்கும் அனைத்துமே சரியாகவும் இருக்காது. எனக்கு இது குறித்து எதுவுமே தெரியாவிட்டாலும் போராட்டம் நடத்துபவர்களுக்கு வாழ்த்துகள். யாருக்காக போராட்டம் நடக்கிறதோ அவர்களுக்கும் வாழ்த்துகள் என்றார்.
முன்னதாக, 2020ல் விவசாயிகளுக்காக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினார். பின்னர், பிரதமர் மோடியைச் சந்தித்து போராட்டக்காரர்களுக்கு அதிர்ச்சியும் அளித்தார். இந்தாண்டு மே மாதத்தில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “என்னுடைய வேலை மக்களை மகிழ்விப்பதே. என்னுடைய துறையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
தில்ஜித் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பிரதமர் உடன் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அதுதான் இன்றளவும் அவரது முகப்பில் முதல் பதிவாக பின் செய்யப்பட்டுள்ளது.
Keep me away from all this, I'm an artist: Diljit on CJP protests at Jantar Mantar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.