FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிஜேபி போராட்டத்தால் தில்லியில் பதற்றம்! சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிப்பு!

தில்லியில் போராட்டத்தால் பதற்றம் அதிகரித்துள்ளதையடுத்து சிஆர்பிஎஃப் வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது பற்றி...

Updated On : 22 ஜூலை 2026, 10:38 am IST
கோப்புப் படம் - ANI
பகிர்:

தில்லியில் இளைஞர்களுடன் விவசாயிகளும் போராட்டத்தில் இணையவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தில்லியில் பாதுகாப்பு நடவடிக்கையாக சிஆர்பிஎஃப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய கடந்த திங்கள்கிழமை, இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இதில் காவல்துறையினர் தாக்கியதில் இளைஞர்கள் பலரும் காயமடைந்தனர்.

Advertisement

Advertisement

எனினும் அவர்களது போராட்டம் தில்லி ஜந்தர் மந்தரில் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் விவசாயிகளும் தில்லியில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள நிலையில் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

தலைநகரில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட மேலும் 20 சிஆர்பிஎஃப் குழுக்கள் தில்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி தில்லியில் சிஜேபி கட்சியினர் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தில்லி போராட்டம் தொடர்பாக காவல்துறையினர் 10 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

summary

Tension in Delhi due to CJP protest: CRPF personnel deployed in large numbers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments