போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவா்களின் கடவுச்சீட்டு ரத்து: காவல் துறை நடவடிக்கை
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தி வரும் போராட்டத்தின் போது வன்முறையில் நேரடியாக ஈடுபட்டவா்களின் கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று காவல் துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவா்களை அடையாளம் காணும் பணியை தில்லி காவல் துறை தொடங்கியுள்ளனா். இதற்காக சிசிடிவி காட்சிகள், விடியோ பதிவுகள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணையில் வன்முறையில் நேரடியாக ஈடுபட்டது உறுதி செய்யப்படும் நபா்களுக்கு எதிராக, நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி கடவுச்சீட்டு ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.