போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் கடவுச்சீட்டு ரத்து: தில்லி காவல்துறை!
சிஜேபி போராட்டத்தில் ஈடுபடுவோரின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்படலாம் என்று தில்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதைப் பற்றி...
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் ஈடுபடுவோரின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்படலாம் என்று தில்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய தேர்வு முகமை நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு உள்பட பல தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி கட்சியினர் அமைதிப் பேரணி நடத்தினர். நாடாளுமன்ற சாலையில் நுழையும்போதே, காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். மாணவர்கள், பெண்கள் உள்பட பலரின் மீதும் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், தொடர்ந்து நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
நீட் முறைகேடுகளைக் கண்டித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பதவி விலக வேண்டுமென்று, பிரதமர் இல்லத்தின் முன்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலர்கள் பிரியங்கா, கே.சி. வேணுகோபால், கேரள முதல்வர் வி.டி. சதீசன், கர்நாடக முதல்வர் சிவகுமார் உள்ளிட்டோர் தர்னாவில் ஈடுபட்டனர்.
பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரின் இல்லத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி செல்ல முயன்றதால் ராகுல், பிரியங்கா, அகிலேஷ் உள்ளிட்டோரைக் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். பின் அவர்கள் நேற்று முன்தினம் (ஜூலை 21) இரவு விடுவிக்கப்பட்டனர்.
இந்தப் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு தழுவிய போராட்டத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கேவும் நாளை (ஜூலை 24) அழைப்பு விடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், போராட்டக்கார்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், போராட்டத்தின்போது கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் கடவுச்சீட்டுகளை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளையும் தில்லி காவல்துறை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Delhi Police will initiate passport cancellation proceedings against individuals found involved in rioting, alongside criminal action, following violence during the CJP's Chalo Sansad march. The party has since called for nationwide protests over the alleged police action on students.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.