FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி: சோனம் வாங்சுக்!

மத்திய கல்வித் துறை அமைச்சர் ராஜிநாமா செய்தது தொடர்பாக சோனம் வாங்சுக் வெளியிட்ட எக்ஸ் பதிவு பற்றி..

Updated On : 25 ஜூலை 2026, 3:49 pm IST
சோனம் வாங்சுக் - PTI
பகிர்:

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியின் சார்பில் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கிய மிகப்பெரிய போராட்டம் நாடு முழுவதும் வெடித்தது. இதனிடையே ஜூன் 28 முதல் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 26 நாள்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதையடுத்து, அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

தலைநகரில் கடந்த 35 நாள்களாக இளைஞர்கள் மத்தியில் நடைபெற்று வந்த மிகப்பெரிய போராட்டம் தற்போது ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளது என்றே சொல்லலாம். இருப்பினும், தான் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இதைத்தொடர்ந்து சோனம் வாங்சுக் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அமைதி, பொறுமை, விடாமுயற்சிக்கான வெற்றி. கரப்பான் ஜனதா கட்சி, ஜென்ஸிக்களுக்கு எனது வாழ்த்துகள்.

வீதிகளிலிருந்து நேரடியாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியைக் கண்டுள்ளனர். அச்சத்தை மீறி தேசத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்து போராடிய மக்களுக்கு நன்றி.

தவறுகளுக்காக பொறுப்பேற்பதில் இருந்து இப்போது சீர்திருத்தங்களை நோக்கி செயல்படுவோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments