FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜந்தர் மந்தர் இணைய முடக்கம்: மனு திரும்பப் பெறப்பட்டதால் வழக்கு தள்ளுபடி!

மத்திய தில்லியின் இணையச் சேவைகள் முடக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்தது பற்றி..

Updated On : 27 ஜூலை 2026, 12:52 pm IST
தில்லி உயர்நீதிமன்றம்
பகிர்:

மத்திய தில்லியின் சில பகுதிகளில் மொபைல் இணையச் சேவைகள் முடக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைத் திரும்பப்பெற்றதையடுத்து, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புது தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள சுமார் 1.5 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் அனைத்து மொபைல் இணையச் சேவைகளையும் இடைநிறுத்துமாறு உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து சாஃப்ட்வேர் ஃப்ரீடம் லா சென்டர், இந்தியா (SFLC.In) என்ற சட்ட சேவை அமைப்பு பொதுநல மனு தாக்கல் செய்தது.

இந்த முடக்க உத்தரவுகள் சட்டவிரோதமானவை, தன்னிச்சையானவை மற்றும் அரசியலமைப்புக்கு முரணானவை என்று குறிப்பிட்ட மனுதாரர், பொது அவசரநிலை ஏதும் இதில் குறிப்பிடப்படவில்லை என்றும், மொபைல் இணையச் சேவைகளை முழுமையாக முடக்குவது ஏன் அவசியமானது அல்லது அச்சுறுத்தல் எனக் கூறப்பட்டதற்கு அது எந்த வகையில் விகிதாச்சார ரீதியாகத் தேவைப்பட்டது என்பதற்கான காரணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் வாதிட்டார்.

Advertisement

Advertisement

சிஜேபி விதித்த கோரிக்கைகளை ஏற்று ஜூலை 25ல் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதையடுத்து சிஜேபியின் பிற கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதாலும் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உடனடியாக மத்திய தில்லியில் இணையச் சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டன.

இதையடுத்து, இந்த வழக்கில் சாஃப்ட்வேர் ஃப்ரீடம் லா சென்டர், இந்தியா தாக்கல் செய்த மனுவைத் திரும்பப்பெற்றதன் அடிப்படையில், தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Legal services organisation Software Freedom Law Centre, India, on Monday withdrew from the Delhi High Court its PIL against the suspension of mobile internet services in parts of central Delhi, with services restored following the withdrawal of the CJP's stir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments