FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேஜரிவாலின் 'பி-டீம்' சிஜேபி - சுவாதி மலிவால் குற்றச்சாட்டு!

அரவிந்த் கேஜரிவாலின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட கரப்பான் ஜனதா கட்சி அமைப்பு பற்றி மலிவால் கூறுவது...

Updated On : 28 ஜூலை 2026, 3:12 pm IST
பாஜக மாநிலங்களவை எம்பி சுவாதி மலிவால் - X
பகிர்:

அரவிந்த் கேஜரிவாலின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்ட கரப்பான் ஜனதா கட்சி அமைப்பை ஆம் ஆத்மி கட்சியின் பி-குழு என்று பாஜக மாநிலங்களவை எம்பி சுவாதி மலிவால் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மலிவால்,

பஞ்சாபில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆறு முக்கிய தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி பல தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்ததுள்ளன.

Advertisement

Advertisement

ஜூலை 19 அன்று நடைபெற்ற மருந்தியல் தேர்விலும் கூட மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.

ஆனால், பஞ்சாபில் வினாத்தாள் கசிவு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.

கேஜரிவால் தான் கரப்பான் ஜனதா கட்சியை உருவாக்கினார். ஆனால் பொறுப்புக்கூறல் குறித்துக் கேள்விகள் எழும்போதும் இருவரும் மௌனமாகிவிடுகிறார்கள். சிஜேபி அவரது 'பி-குழு' ஆகும். ஏனெனில், அவரது ஆதரவாளர்களால் அவரது பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் சிஜேபி-க்காக ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய அளவிலான கட்டண விளம்பரப் பிரசாரத்தை மேற்கொண்டது. இது நம் அனைவருக்கும் தெரிந்ததே.

ஒருபுறம் அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள், மறுபுறம் தங்கள் சொந்தப் பொறுப்புக்கூறல் என்று வரும்போது, ​​மௌனமாகி மறைந்து விடுகிறார்கள்.

பஞ்சாபில் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து சிஜேபியோ, அரவிந்த் கேஜரிவாலோ பேசுவதில்லை, அவர்கள் அதிலிருந்து தப்பி ஓடுகிறார்கள்.

மக்கள் வீதிகளுக்கு வர வேண்டும், தில்லியும் நேபாளத்தைப் போல மாற வேண்டும் என்று கூறி கேஜரிவால் தினமும் காணொலிகளை வெளியிடுகிறார்.

பகவந்த் மானை விமர்சித்து அவர், நாள் முழுவதும் போதையில் இருக்கும் பஞ்சாப் முதல்வர் தொடர்பற்ற மற்றும் தெளிவற்ற கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

இது முற்றிலும் தவறானது; இத்தகைய இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக்கூடாது. பஞ்சாப் கல்வி அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

BJP Rajya Sabha MP Swati Maliwal on Tuesday attacked AAP national convener Arvind Kejriwal, alleging six major paper leaks in Punjab in five years and questioning his "silence" on the issue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments