பாலியல் தொழிலில் ஈடுபடுவோருக்கான அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்
பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் அடிப்படை உரிமைகள் பற்றி உச்ச நீதிமன்றம்...
புது தில்லி : பாலியல் தொழிலில் சுய விருப்பத்தின்பேரில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமில்லை என்று காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாலியல் தொழில் மூலம் பெண்களை கொடுமைப்படுத்துதல் செயல்களில் ஈடுபடும் குற்றங்களிலிருந்து மீட்கப்படும் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அல்லது ஆண்கள் ஆகியோரின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் குறித்து வழிகாட்டுதல் வழங்கக் கோரிய மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
பாலியல் தொழிலை வணிகமயமாக்குவதையும், பெண்களை மனித கடத்தல் செய்வதையும் தடுக்கும் சட்டம் (ITP Act (Immoral Traffic (Prevention) Act, 1956)) பற்றிய ஆய்வு மனுவில் நாட்டின் தலைமை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாவது :
Advertisement
Advertisement
70 ஆண்டுகால பழமையான இந்தச் சட்டத்தில் உள்ள அம்சங்களில் பாலியல் தொழிலில் சுய விருப்பத்தின்பேரில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. பாலியல் நடவடிக்கை செய்வது மட்டுமே சட்டவிரோதம் அல்ல. அதனை வணிக பயன்பாட்டுக்காக மாற்றி பயன்படுத்துவது குற்றமாகும். ஆகவே, பாலியல் தொழில் குறித்து போலீஸார் சோதனை செய்து அப்போது சிக்கும் பாதிக்கப்பட்ட பெண்களை கைது செய்து விசாரணை செய்யலாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் தொழிலாளிகளுக்கான மறுவாழ்வு குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நீதிமன்றம், பாலியல் தொழிலாளிகளைத் துன்புறுத்டக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
மறுவாழ்வுக்கு அவர்களுக்கு விருப்பமில்லாதபட்சத்தில் அவர்களைக் கட்டாயப்படுத்தி அதில் ஈடுபடுத்தக் கூடாது. மறுவாழ்வு மையங்களுக்கு சென்று புது வாழ்க்கையை தொடங்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் பாலியல் தொழிலாளிகளின் விருப்பமே முதன்மையாக கருத்திற்கொள்ள வேண்டியதாகும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.