மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவு
கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றுக்கொண்ட பிறகு நடந்த முதல் அமைச்சரவைக் கூடத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து...
கர்நாடகத்தில் பள்ளி முதல் முதுகலை மாணவர்கள் வரை அனைத்து மாணவர்களும் கட்டணமின்றி பயணிக்கலாம் என முதல்வர் டி.கே. சிவகுமார் இன்று (ஜூன் 3) தெரிவித்துள்ளார்.
எனினும் இதற்கு பயண அட்டை (பாஸ்) அவசியம் என்றும், போக்குவரத்துத் துறையுடன் ஆலோசித்து மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
கர்நாடக முதல்வராக டி.கே. சிவகுமார் இன்று (ஜூன் 3) பதவியேற்றுக்கொண்ட பிறகு நடந்த முதல் அமைச்சரவைக் கூடத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
Advertisement
Advertisement
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுடன் டி.கே. சிவகுமார் பேசியதாவது:
''கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் எவ்வித கட்டணமும் இன்றி அரசுப் பேருந்துகளில் பயணிக்கலாம். கட்டணமில்லா பேருந்து சலுகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக போக்குவரத்துத் துறையுடன் ஆலோசனை நடத்தப்படும்.
வேலையில்லா பட்டதாரிகள் அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டும். அவற்றைக் கொண்டு தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தகுதி வாய்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
கிராமங்களில் பாரத் ஜோடோ மன்றங்கள் உருவாக்கப்படும். இளைஞர்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல், இந்த மன்றங்கள் மூலம் ஆரோக்கியமாக வழிநடத்தப்படுவார்கள். இதற்காக அரசு சார்பில் ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் அனைத்து கிராமங்களிலும் 10,000 பாரத் ஜோடோ மன்றங்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
Bus pass is free for all school and college students Karnataka CM D.K. Shivakumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.