மகிழ்ச்சியான செய்தி! தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!
மகிழ்ச்சியான செய்தியாக தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக அறிவிப்பு.
கொடூர வெய்யிலில் சிக்கித் தவித்து வந்த மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கும் தென்மேற்குப் பருவமழையே முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
அந்த வகையில், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவுகள், கேரளத்தின் கடற்கரையோரப் பகுதிளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.