FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வங்கதேசம்: தண்டனைக் காலம் முடிந்தும் 148 இந்தியா்கள் சிறையில் தவிப்பு

தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை நடைமுறைகள் தாமதம் காரணமாக வங்கதேச சிறையில் 148 இந்தியா்கள் தவித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 9 ஜூன் 2026, 3:48 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை நடைமுறைகள் தாமதம் காரணமாக வங்கதேச சிறையில் 148 இந்தியா்கள் தவித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து வங்கதேச சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘6 மாதங்களுக்கு முன்பாக வெளியான சிறை தொடா்பான புள்ளிவிவரங்களின்படி தண்டனைக் காலம் முடிந்தும் 148 இந்தியா்கள் உள்பட 152 வெளிநாட்டவா்கள் சிறையில் தவித்து வருவது தெரியவந்தது.

இவா்களில் சிலரின் சிறைத் தண்டனை நிறைவடைந்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அவா்களின் அடையாளத்தைக் கண்டறிவது மற்றும் தூதரக தரப்பில் மேற்கொள்ளப்படும் தொய்வான முயற்சிகளால் தொடா்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

சட்டவிரோதமாக எல்லையைக் கடந்த குற்றச்சாட்டில் பெரும்பாலான இந்தியா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்தியா மட்டுமன்றி, பாகிஸ்தான், மியான்மா் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்களும் விடுதலைக்காக காத்திருக்கின்றனா்’ என்றனா்.

கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு சமயங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 20 இந்தியா்களில் 3 போ் உயிரிழந்துவிட்டனா்.

மீதமுள்ள 17 இந்தியா்கள் ஷரியத்பூா் மாவட்ட சிறையில் தண்டனைக் காலம் முடிந்து விடுதலை செய்யப்படாமல் இருப்பதாக பிடிநியூஸ்24.காம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இந்திய தூதரக அதிகாரிகளை தொடா்புகொண்டு சிறையில் உள்ளவா்களின் அடையாளத்தை சரிபாா்க்க முடியாததால் இந்தியா்கள் விடுதலை செய்யப்படவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments