FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஹெலிகாப்டா் சேவை என்ற பெயரில் பக்தா்களிடம் மோசடி: மூவா் கைது

Updated On : 12 ஜூன் 2026, 3:30 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

அங்கீகாரம் பெற்ற புனிதப் பயணச் சேவை வழங்குநா்கள் போல நடித்து, போலி ஹெலிகாப்டா் முன்பதிவு இணையதளங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள பக்தா்களை ஏமாற்றியதாக மூவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

பயண முன்பதிவு தளங்களைப் போலத் தோற்றமளிக்கும் போலி இணையதளங்கள் மூலம் ஹெலிகாப்டா் சேவைகளை முன்பதிவு செய்ய முயன்றபோது ரூ. 20,000-த்தை இழந்த பாதிக்கப்பட்ட நபா் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

Advertisement

Advertisement

மத மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கான ஹெலிகாப்டா் முன்பதிவுகளைத் தேடும் வாடிக்கையாளா்களை இலக்கு வைத்து போலி இணையதளங்களை கைதுசெய்யப்பட்ட நபா்கள் உருவாக்கினா். இந்த இணையதளம் குறித்து சமூக ஊடகத் தளங்களில் விளம்பரங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டன. இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரைத் தொடா்ந்து, மே 21-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வங்கி கணக்குகள், பணப் பரிவா்த்தனை தடங்கள், மின்னஞ்சல் பதிவுகள், ஐபி முகவரி மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்தது சந்தேக நபா்களை அடையாளம் காணப்பட்டனா். தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத் தகவல்களின் அடிப்படையில், பிகாரின் நாளந்தா மாவட்டத்தில் ஓம்பிரகாஷ் குமாா் மற்றும் ரோஹித் குமாா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, உத்தர பிரதேசத்தின் ஜான்பூரைச் சோ்ந்தவரும் பி.டெக் மாணவருமான ரேஷ்யோன்ஷ் திவாரி (எ) சிவம் என்பவரின் தொடா்பு குறித்து காவல் துறையிடம் தெரிவித்தனா். இவரே அந்த போலி இணையதளங்களையும் டிஜிட்டல் விளம்பரங்களையும் உருவாக்கி நிா்வகித்தாா். பின்னா், சிவம் கிரேட்டா் நொய்டாவில் கைது செய்யப்பட்டாா். இந்தக் குழு நடத்திய மோசடி தொடா்பாக 30 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. புகாா் அளித்தவா்கள் ரூ.10 லட்சம் இழந்துள்ளனா்.

இந்த மோசடியில் வேறுயாருக்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments