மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீசிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீசிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்னௌ - புதுதில்லி இடையே இயங்கும் ஸ்வர்ண சதாப்தி ரயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வியாழக்கிழமை பயணித்தார். இரவு 7.20 மணியளவில் ரயில், ஃபெரோசாபாத் நிலையத்தை ரயில் நெருங்கிக்கொண்டிருந்தபோது அதன் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசியுள்ளனர்.
இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
எனினும், இந்த தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூவரில் இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். மூன்றாவது நபரைப் பிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி சசிகாந்த் திரிபாதி கூறுகையில், கல் வீசப்பட்டபோது மோகன் பகவத், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்புப் பெட்டியான 'இ1'-ல் உள்ள 39 மற்றும் 40-வது இருக்கைகளில் பயணித்துக்கொண்டிருந்தார்.
கல் 51-வது இருக்கைக்கு அருகிலுள்ள ஜன்னலின் வெளிப்புறப் பகுதியில் தாக்கியது. ஜன்னலின் உட்புறப் பகுதி பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
Police have arrested two of the three accused involved in the stone-pelting incident on a train, with CCTV footage playing a key role in identifying the suspects.