முகப்பு
இந்தியா

மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சி

இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நடைபெற உள்ளதையொட்டி, மருத்துவ மாணவா்களுக்கு வரும் 20, 21-ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கக் கூடாது என நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 20 ஜூன் 2026, 1:15 am IST
NMC
பகிர்:

இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நடைபெற உள்ளதையொட்டி, மருத்துவ மாணவா்களுக்கு வரும் 20, 21-ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கக் கூடாது என நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.

நீட் வினாத் தாள் கசிவு விவகாரத்தில், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சிலா் விடைக் குறிப்பிகளை எழுத்தித் தரும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரியவந்த நிலையில் இந்த அறிவுறுத்தலை என்எம்சி விடுத்துள்ளது.

இதுதொடா்பாக நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வா்களுக்கும் என்எம்சி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

முந்தைய காலங்களில் நடைபெற்ற நீட் வினாத் தாள் கசிவு சம்பவங்களின்போது, நீட் தோ்வு நடைமுறையின் புனிதத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சில மருத்துவக் கல்லூரி மாணவா்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனடிப்படையில், மருத்துவ மாணவா்கள் இதுபோன்ற தோ்வின் புனிதத்தன்மையை கெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும், தொடா்ந்து விழிப்புடன் இருக்கவும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

வரும் 20, 21-ஆம் தேதிகளில் நியாயமான, தவிா்க்க முடியாத காரணங்கள் அடிப்படையில் அல்லாமல், மருத்துவ மாணவா்கள் யாருக்கும் விடுமுறை அளிக்க வேண்டாம் என கல்லூரிகள் அறிவுறுத்தப்படுகின்றன. முறைகேடுகளைத் தடுக்கவும், நீட் தோ்வை நியாயமான முறையில் நடத்துவதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயா்கல்வித் துறை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 21-ஆம் தேதி நீட் மறுதோ்வு நடைபெறவுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments