முகப்பு
இந்தியா

மாணவர்களை பயங்கரவாதிகள் என தர்மேந்திர பிரதான் கூறியதற்கு கார்கே கண்டனம்!

போராடும் மாணவர்களை மத்திய கல்வித்துறை அமைச்சர் பயங்கரவாதிகள் எனக் கூறியதற்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்...

Updated On : 24 ஜூன் 2026, 5:20 pm IST
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - PTI
பகிர்:

போராட்டம் நடத்தும் மாணவர்களை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பயங்கரவாதிகள் எனக் கூறியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் பயங்கரவாதிகளின் பி டீம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மத்திய அரசைக் கேள்வி கேட்கும் நபர்கள் அனைவரும் தேச விரோதிகள் என முத்திரை குத்தப்படுவதாக, காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“90 வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளன. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் பாழாகியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவின் காரணமாக 20 குழந்தைகள் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்திலேயே விவசாயிகளை அவமதிக்கும் வகையில் அந்தோலன் ஜீவி (போராட்டத்தையே தொழிலாகக் கொண்டவர்கள்) மற்றும் பர்ஜீவி (ஒட்டுண்ணிகள்) என்றெல்லாம் குறிப்பிட்டதை நாடு மறக்கவில்லை. இந்த அரசைக் கேள்வி கேட்கும் எவரும் தேசவிரோதி எனறு முத்திரை குத்தப்படுகிறார்கள்.

மாணவர்களின் குரல் நாடு முழுவதும் சத்தமாக ஒலிக்கும். மோடியின் அமைச்சர் பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்தாக வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

summary

Kharge has condemned Union Education Minister Dharmendra Pradhan for calling members of the 'Cockroach Party' terrorists.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments