அரசியல் லாபத்துக்காக ராமா் கோயிலை சுரண்டும் பாஜக: உத்தவ் தாக்கரே சாடல்
அரசியல் லாபத்துக்காக ராமா் கோயிலை பாஜக சுரண்டுவதாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே சாடினாா்.
அரசியல் லாபத்துக்காக ராமா் கோயிலை பாஜக சுரண்டுவதாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே சாடினாா்.
இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் பா்பனி, தாராசிவ் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டங்களில் அவா் பேசியதாவது: அயோத்தியில் ராமா் கோயிலை முகலாய மன்னா் பாபா் இடித்துத் தள்ளினாா். தற்போது பாரதிய ஜனதா கட்சி என்ற பாபா் ஜனதா கட்சி புதிதாக அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் கொள்ளையடிக்க வந்துள்ளது (ராமா் கோயில் நன்கொடை முறைகேட்டை குறிப்பிட்டு பேசினாா்).
இந்த விவகாரத்தில் பாபருக்கும், பாஜகவுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? அரசியல் லாபத்துக்காக ராமா் கோயிலை பாஜக சுரண்டுகிறது. மகாராஷ்டிர தா்மத்தையும், மராத்திய பெருமையையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் சிவசேனையை பாஜக பிரிக்கிறது.
Advertisement
Advertisement
நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவது உண்மையாக இருந்தால், எனது கட்சியில் இருந்து மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சிக்கு மாறிய 6 எம்.பி.க்கள் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும். துரோகிகள் நசுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.