அதிக வருமான வரி செலுத்துவதில் தோனி முதலிடம்!
வருமான வரி அதிகமாக செலுத்துவோரில் கிரிக்கெட் வீரர் தோனி முதலிடம்
பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் அதிக வருமான வரி செலுத்துவோரில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 2025 - 26 நிதியாண்டில் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து மொத்த வரியாக சுமார் ரூ. 20,000 கோடி வசூலிக்கப்பட்டதாக பிகார் - ஜார்க்கண்ட் வருமான வரித்துறை முதன்மைத் தலைமை ஆணையர் டாக்டர் டி. சுதாகர ராவ் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இரு மாநிலங்களிலும் சேர்த்து தனி நபர் பிரிவில் அதிக வரி செலுத்தியவர்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Advertisement
Advertisement
தோனி செலுத்திய வரித் தொகையை வெளியிடாதபோதிலும், கடந்த நிதியாண்டில் சுமார் ரூ. 38 கோடியை முன்கூட்டிய வரியாக தோனி செலுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
MS Dhoni Tops Tax Taxpayer List in Bihar - Jharkhand For FY 2025-26
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.