வர்த்தகப் பேச்சு! ஜூன் மாதம் இந்தியா வரும் அமெரிக்க குழு!
வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்க குழு இந்தியா வருவது குறித்து...
வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்க குழுவினர் வரும் ஜூன் மாதம் இந்தியா வரக் கூடும் என வணிகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்த அதிகப்படியான வரிகளைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் பல்வேறு கட்டங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதனைத் தொடர்ந்து, இடைக்கால ஒப்பந்தத்தை இறுதி செய்யவும், விரிவான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவும் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய குழுவினர் அமெரிக்க தலைநகரான வாஷிங்டனுக்குச் சென்றிருந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்க குழுவினர் வரும் ஜூன் மாதம் இந்தியா வருவதாகவும், உரிய சமயத்தில் இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் மத்திய வணிகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் இன்று (மே 15) தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பரஸ்பர மற்றும் இருநாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பை இறுதி செய்வது தொடர்பாக, கடந்த பிப். 7 அன்று இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Commerce Secretary Rajesh Agarwal has stated that a US delegation is likely to visit India this coming June to hold trade negotiations.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.