கேரளத்துக்கு எருமைகள் கடத்தல்: 4 பேர் கைது!
கர்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு எருமை கடத்தல்...
மங்களூரு : கர்நாடகத்திலிருந்து கேரளத்துக்கு எருமை கடத்தலில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகத்தின் ஹாவேரி மாவட்ட பகுதிகளிலிருந்து கேரளத்தின் தாலிப்பறம்பாவுக்கு வாகனம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட 27 எருமைகளை கர்நாடக போலீஸார் மீட்டனர். மங்களூரு எல்லைக்குள்பட்ட ஜப்பினமொகரு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 66-இல் சென்ற வாகனங்களை வழிமறித்து அதிகாலையில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது அந்த வாகனத்தில் எருமைகள் கடத்தப்பட்டதை போலீஸார் உறுதி செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப்பட்டதுடன் இது தொடர்பாக வழக்கு பதிந்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
Four persons were arrested on Saturday for allegedly transporting cattle illegally to Kerala and 27 buffaloes being carried in a "cruel" manner in a truck were rescued on National Highway 66 in the city, police said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.