முகப்பு
இந்தியா

பத்ரிநாத் அருகே மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு!

பத்ரிநாத் அருகே மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

பத்ரிநாத் அருகே ஏற்பட்ட பனிச்சரிவு - Video grab
பகிர்:

பத்ரிநாத் அருகேயுள்ள குபேர் பர்வதப் பகுதியில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய பனிச்சரிவு அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் புனித யாத்திரையான சார் தாம் யாத்திரை பாதிக்கப்படவில்லை என்றும் அங்குள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பனிச்சரிவு காரணமாக அதிகம் பாதிக்கப்படும் பகுதியான கஞ்சன்கங்கா நாலா பகுதியில், இன்று காலை சுமார் 10 மணியளவில் இந்தப் பனிச்சரிவு நிகழந்தது.

Advertisement

Advertisement

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில், பெரிய பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்து மேகக்கூட்டம் போல பனிப்புகை மேலேறும் காட்சி வெளியாகியுள்ளது.

பனிச்சரிவு பள்ளத்தாக்கின் உள்ளேயே கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

கோடை காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் இவ்வாறு பனிச்சரிவு ஏற்படுவதாக அங்குள்ளோர் கூறுகின்றனர். வெப்பம் அதிகரிக்கையில் பனிப்பாறைகளின் மேல் அடுக்குகளில் அவை வலிமையிழந்து பிளவு ஏற்பட்டு அவை சரிய காரணமாகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதியை அரசு நிர்வாகம் கண்காணித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் அந்தப் பகுதியின் மாவட்ட ஆட்சியர் கௌரவ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், சார் தாம் யாத்திரை சீராக நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 31,965 யாத்திரீகர்கள் பத்ரிநாத்தில் தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

summary

Massive Avalanche Near Badrinath

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.