ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் பங்குகள் உயர்வு!
ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் பங்குகள் 7.7% வரை உயர்ந்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஒற்றை நாள் ஏற்றமாக ரூ. 574.20 என்ற உச்சத்தை எட்டியது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸின் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில், இன்றைய வர்த்தகத்தில் 7.7% வரை உயர்ந்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஒற்றை நாள் ஏற்றமாக ரூ. 574.20 என்ற உச்சத்தை எட்டியது.
வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அதன் செயற்கை நுண்ணறிவு தினத்தில், நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு விளக்கக்காட்சியைத் தொடர்ந்து, இந்தப் பங்கு வாங்குவதற்கான ஆர்வம் முதலீட்டாளர்களிடம் அதிகரித்தது.
செயற்கை நுண்ணறிவு தலைமையிலான மாற்றத்தால், 2029க்குள் வருவாய் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்ப்பதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
செயற்கை நுண்ணறிவு தலைமையிலான மாற்றம், மேற்கு ஆசிய விரிவாக்கம், தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி மற்றும் தனியார் முதலீடு உள்ளிட்ட காரணிகளால், நிறுவனத்தின் வருவாய் சுமார் 1.5 பில்லியனிலிருந்து 2029-க்குள் 3 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்தார்.
இன்றைய வர்த்தகத்தில், ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் பங்குகள் 4.04% உயர்ந்து ரூ. 555 ஆக வர்த்தகமானது.
Shares of information technology company Hexaware Technologies rose as much as 7.7%.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.