ம.பி.யில் புலி தாக்கியதில் பெண் பலி, 4 பேர் காயம்
மத்திய பிரதேசத்தில் புலி தாக்கியதில் பெண் பலியானதுடன் 4 பேர் காயமடைந்தனர்.
மத்திய பிரதேசத்தில் புலி தாக்கியதில் பெண் பலியானதுடன் 4 பேர் காயமடைந்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் உமரியா மாவட்டத்தில் உள்ள பந்தவ்கர் புலிகள் காப்பகத்திற்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புலி ஒன்று அத்துமீறி நுழைந்து, பெண்ணைக் கடித்துக் கொன்றது.
மேலும் நான்கு பேர் புலி தாக்குதலால் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
பலியானவர் பூல் பாய் பால் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆத்திரமடைந்த கிராமவாசிகள் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது வனச்சரகரைத் தாக்கியதுடன், பெண் ஊழியர் ஒருவரையும் தரக்குறைவாக நடத்தியதாகத் தெரிகிறது.
அத்துடன் புலி தாக்குதலில் பலியான பெண்ணின் சடலத்தை உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்ல அதிகாரிகளையும் போலீஸாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவரும் ஜனபத் பஞ்சாயத்து உறுப்பினருமான ரோஷ்னி சிங் துர்வே கிராமத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் அவர் வனத்துறை அதிகாரிகளை விடுவிக்க உதவியதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
A tiger strayed into a residential area near the Bandhavgarh Tiger Reserve in Madhya Pradesh's Umaria district early on Sunday, mauling a woman to death and injuring four other persons, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.