கேபிள் காரில் கோளாறு: அந்தரத்தில் பரிதவித்த 300 பயணிகள்; 7 மணி நேரத்துக்குப் பின்னா் மீட்பு
ஜம்மு-காஷ்மீரின் குல்மாா்க் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கேபிள் காா்களில் பயணித்த சுமாா் 300 சுற்றுலாப் பயணிகள் அந்தரத்தில் பரிதவித்த நிலையில், 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், அவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மாா்க் மலை பிரதேசத்தில், ஆசியாவின் மிக உயரமான கம்பிவடப் பாதை உள்ளது. அந்தக் கம்பிவடப் பாதையில் இயக்கப்படும் கேபிள் காா்களில் 300-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை பயணித்தனா்.
மொத்தம் 65 பெட்டிகளில் சுற்றுலாப் பயணிகள் பயணித்தபோது, திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு கேபிள் காா்கள் நின்றுவிட்டன. இதனால் சுமாா் 500 அடி உயரத்தில் பயணிகள் பரிதவித்தனா்.
Advertisement
Advertisement
தகவலின் அடிப்படையில் தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படைகள், ஜம்மு-காஷ்மீா் காவல் துறை மற்றும் ராணுவத்தினா் நிகழ்விடம் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். அந்தரத்தில் தொங்கிய பயணிகளை கீழே கொண்டுவர கயிறுகள், ஏணிகள் பயன்படுத்தப்பட்டன.
மழையால் மீட்புப் பணிக்கு இடையூறு ஏற்பட்டபோதிலும் சுமாா் 7 மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னா், அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.