சாலை போட முடியாவிட்டால் ஹெலிகாப்டர் தாருங்கள்: அமித் ஷாவுக்கு வந்த கோரிக்கை
கிராமத்துக்கு சாலை போட முடியாவிட்டால் ஹெலிகாப்டர் தாருங்கள் என அமித் ஷாவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ராய்பூர்: பல பத்தாண்டு காலமாக சாலை வசதிக்காகக் காத்திருந்து, கிடைக்காத விரக்தியில் இருக்கும் கிராம மக்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், சாலை வசதி செய்ய முடியாவிட்டால், ஹெலிகாப்டர் வாங்கிக் கொடுங்கள் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், பாஸ்தர் கிராம மக்கள், மிக விநோதமான கோரிக்கை ஒன்றை மத்திய அமைச்சருக்கு அனுப்பியிருக்கிறார்க.ள
மருகி என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வைத்திருக்கும் கோரிக்கை சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருக்கிறது. மாவோயிஸ்டுகள் வசம் இருந்த இந்த கிராமத்தில் தற்போது வரை சாலை வசதிகள் போட முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர்கள் அனுப்பியிருக்கும் கடிதத்தில், மிக நீண்ட காலமாக, நாங்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், எங்கள் கிராமத்துக்கு சாலை வசதி அமைக்க அதிகாரிகளால் முடியவில்லை. எனவே, நீங்கள் எங்களுக்கு ஹெலிகாப்டர் கொடுத்துவிட்டால், அவசர காலங்களில் அதன் மூலம் மக்கள் பயணிப்பார்கள் என்று எழுதியிருக்கிறார்கள்.
பல ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாததால், கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இந்த கடிதத்தை எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.
உதவியின்றி, அதிருப்தியில் இருக்கும் மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி கேட்டு வருகிறார்கள். உறுதிமொழிகள் மட்டுமே வருகின்றன. சாலை வரவில்லை. எல்லோரையும் கேட்டுவிட்டோம், மனு கொடுத்துவிட்டோம், ஆட்சியரைக் கூட சந்தித்துவிட்டோம். ஆனால் எதுவும் பயனில்லை.
பத்தாண்டுகளுக்கு முன்பு, சாலை அமைக்க வந்த ஒப்பந்ததாரரும், இங்கு சிறு பாலங்கள் அமைத்துத்தான் சாலை போட முடியும் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்கள். அதன்பிறகு சாலையே வரவில்லை. மழைக்காலங்களில் எங்களால் வெளியே செல்லவே முடியாது. கர்ப்பிணிகள், முதியவர்களை அவசர சிகிச்சைக்காக கொண்டு செல்ல வேண்டுமானால் பல கிலோ மீட்டருக்கு அவர்களை கரடுமுரடான பாதையில் சுமந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது என்கிறார்கள் கிராம மக்கள்.
ரேஷன் வாங்க 11 கிலோ மீட்டர் நடக்கிறோம், மாவோயிஸ்டுகள் இங்கிருந்து சென்றுவிட்டார்கள். ஆனாலும் எங்களுக்கு சாலை கூட மறுக்கப்படுகிறது என்று தெரிவித்து வருகிறார்கள்.
A request has been made to Amit Shah to provide a helicopter if the village cannot be built with a road.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.