வல்லுறவு வழக்கு: ஆசாராமின் ஆயுள் தண்டனை உறுதி! சரணடைய உத்தரவு!
ஆசாராமின் ஆயுள் தண்டனையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
வல்லுறவு வழக்கில் ஆசாராம் பாபுவின் ஆயுள் தண்டனையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் ஷாஜகான்பூரைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில், ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு தனது ஆசிரமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தன்னைத் தானே சாமியார் என அறிவித்துக்கொண்ட ஆசாராமுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இன்று(மே 27) உறுதி செய்துள்ளது.
அதேசமயம், விடுதிக் காப்பாளர் ஷில்பி மற்றும் சேவாதார் சரத் சந்திரா ஆகியோரை இந்த வழக்கிலிருந்து விடுவித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, ஆசாராம் பாபு உடனடியாக ஜோத்பூர் மத்திய சிறையில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஆசாராம் 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். நீண்ட விசாரணைக்குப் பிறகு, ஜோத்பூரில் உள்ள சிறப்பு போக்ஸோ நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
விடுதிக் காப்பாளர் ஷில்பி மற்றும் சேவாதார் சரத் சந்திரா ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக மூவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளிலிருந்து இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீனில் வெளியே உள்ள நிலையில், மருத்துவக் காரணங்களுக்காக உயர் நீதிமன்றம் இந்த ஜாமீனை ஜூலை 7 ஆம் தேதி வரை நீட்டித்தது.
இந்த இடைக்கால ஜாமீன், ஜூலை 7 ஆம் தேதி வரை அல்லது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஆசாராம் தாக்கல் செய்த மனு மீதான ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை அமலில் இருக்கும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
The Rajasthan High Court has upheld Asaram Bapu's life sentence in a rape case.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.