FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இன்று பக்ரீத் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

Updated On : 28 மே 2026, 6:15 am IST
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
பகிர்:

பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை (மே 28) கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை புதன்கிழமை வெளியிட்ட செய்தியில், ‘பக்தியுணா்வு, தியாகம், சுயநலமின்மை ஆகியவற்றின் திருநாளாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. சகமனிதா்களுக்கு உதவுவது முக்கியமாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கு கைகொடுத்து உதவுவதை ஊக்குவிப்பதாக இந்த பண்டிகை அமைகிறது. இந்த நாளில் நம்மிடையே அன்பு, சமூக நல்லிணக்கம் ஆகியவை வலிமையுடன் மேம்பட வேண்டும்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் சக குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமாக முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments