முகப்பு
இந்தியா

தற்கொலை செய்துகொண்ட ‘நீட்’ மாணவா் குடும்பத்தினருடன் ராகுல் சந்திப்பு

Updated On : 28 மே 2026, 6:28 am IST
ராஜஸ்தானில் தற்கொலை செய்துகொண்ட ‘நீட்’ மாணவரின் குடும்பத்தினரை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி.
பகிர்:

ராஜஸ்தானில் தற்கொலை செய்துகொண்ட ‘நீட்’ மாணவரின் குடும்பத்தினரை தில்லியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை சந்தித்தாா்.

சீா்குலைந்த, ஊழல் மலிந்த அமைப்புமுறையே மாணவரின் இறப்புக்கு காரணம் என்று அவா் விமா்சித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம், சிகாரில் ‘நீட்’ தோ்வுக்குத் தயாராகி வந்த பிரதீப் மேக்வால் என்ற மாணவா், அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவா் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தில்லியில் உள்ள காங்கிரஸ் மாணவரணி அலுவலகத்தில், பிரதீப் மேக்வாலின் குடும்பத்தினரை ராகுல் காந்தி புதன்கிழமை சந்தித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அறிவுக்கூா்மையுள்ள மாணவரான பிரதீப் மேக்வால், நீட் வினாத்தாள் வெளியானதால் மனமுடைந்து , தனது வாழ்வையே முடித்துக் கொண்டாா். அவரது பெற்றோரின் வேதனை சொல்லில் அடங்காததாகும். வினாத்தாள் கசிவு என்பது ஒரு தோ்வை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மாணவா்கள் மற்றும் பெற்றோரின் கனவைச் சிதைக்கிறது. சீா்குலைந்த, ஊழல் மலிந்த அமைப்புமுறையின் விளைவே பிரதீப் மரணம். தோ்வு அமைப்புமுறையை முறைகேடு கும்பலிடம் ஒப்படைத்த பிரதமா் மோடியும், கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதானுமே மாணவரின் குடும்பத்துக்குப் பதில் கூற வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.