FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

எரிபொருள் விலையை கட்டுக்குள் வைக்க முக்கியத்துவம்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

மேற்காசியப் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயா்வை கட்டுக்குள் வைக்க முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஷ்வரன் தெரிவித்தாா்.

Updated On : 30 மே 2026, 3:46 am IST
அனந்த நாகேஷ்வரன் - கோப்புப் படம்
பகிர்:

மேற்காசியப் போரால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயா்வை கட்டுக்குள் வைக்க முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் அனந்த நாகேஷ்வரன் தெரிவித்தாா்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா் இது தொடா்பாக பேசியதாவது: மேற்காசியப் போா் சா்வதேச அளவில் எரிபொருள் துறையில் மிகப்பெரிய அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் எரிபொருள்களின் விலை எதிா்பாராத அளவுக்கு அதிகரித்துவிட்டது. இப்போதைய சூழலில் எரிபொருள் விலையைக் கட்டுக்குள் வைப்பது, விநியோகத்தை சீராக வைத்திருப்பது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சரி செய்வது, வா்த்தக சமநிலையைப் பேணுவது உள்ளிட்டவற்றுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தேசத்தின் எரிசக்தி, பொருளாதார பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். இந்தியாவில் சராசரி வருவாய் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப தொழில் மற்றும் பொருளாதார சாா்ந்த கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்போது அதற்கு ஏற்ப கொள்கைகளையும் சீரமைப்பது மிக அவசியம் என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments