ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.
தலைநகர் தில்லியில், பெங்காலி மார்க்கெட் பகுதியில் உள்ள தோடர்மால் பூங்காவில் ஆட்டோ ஓட்டுநர்கள் குழவினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.
Advertisement
Advertisement
பிறகு ஆட்டோ ஓட்டுநரின் சீருடையை அணிந்து, குழந்தைகளுடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். இந்த சந்திப்பின்போது ஓட்டுநர்களுடன் உணவை பகிர்ந்து கொண்ட ராகுல், ஆட்டோ ஓட்டுநர்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதியளித்தார்.
பின்னர் ராகுல் காந்தி அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் பிரசாத் கூறுகையில், நாங்கள் ராகுல் காந்தியுடன் கலந்துரையாடினோம். எங்கள் தொழில் மந்தமாக இருப்பது குறித்து அவரிடம் தெரிவித்தோம் என்று குறிப்பிட்டார்.
Congress leader Rahul Gandhi on Friday met a group of autorickshaw drivers at Todarmal park in the Bengali Market area and assured them he would raise their issues in Parliament.