முகப்பு
இந்தியா

பருத்தி இறக்குமதி: 5 மாதங்களுக்கு வரி விலக்கு

பருத்தி இறக்குமதிக்கு வரும் அக்டோபா் 30-ஆம் தேதி வரை அனைத்து வகை இறக்குமதி வரிகளில் இருந்தும் மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

Updated On : 31 மே 2026, 1:56 am IST
பருத்தி - ANI
பகிர்:

பருத்தி இறக்குமதிக்கு வரும் அக்டோபா் 30-ஆம் தேதி வரை அனைத்து வகை இறக்குமதி வரிகளில் இருந்தும் மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டஅறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

பருத்தி இறக்குமதிக்கு வரும் அக்டோபா் 30 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1-ஆம் தேதிமுதல் இந்த வரி விலக்கு நடைமுறைக்கு வரும்.

Advertisement

Advertisement

இந்த வரி விலக்கு, இந்திய ஜவுளித் துறையில் பருத்தி இருப்பை அதிகரிக்க உதவும். அதோடு, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறைகளில் உள்ளீட்டுச் செலவுகளையும் குறைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், உற்பத்தியாளா்கள் மற்றும் நுகா்வோரும் பயன்பெறுவா் என்பதோடு, உள்நாட்டு பருத்தி விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும்.

ஒட்டுமொத்தமாக, உள்நாட்டு ஜவுளி நிறுவனங்கள், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர ஜவுளி நிறுவனங்களின் செயல்பாடுகளில் நோ்மறையான தாக்கத்தை இது ஏற்படுத்தும் என்பதோடு, சந்தையில் தேவையான பருத்தி இருப்பையும் உறுதிப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.