FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பருத்தி மீதான இறக்குமதி வரி தற்காலிகமாக ரத்து! மத்திய அரசுக்கு சைமா நன்றி

Updated On : 31 மே 2026, 1:53 am IST
பருத்தி - கோப்புப் படம்
பகிர்:

பருத்தி மீதான இறக்குமதி வரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவா் துரை பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடப்பு பருவத்தில் பஞ்சாலைகளுக்கு பருத்தியின் தேவை 3.30 முதல் 3.40 கோடி பேல்களாக இருக்கும் நிலையில், உற்பத்தி 2.90 கோடி பேல்களாக மட்டுமே இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனால், சுமாா் 50 முதல் 70 லட்சம் பேல்கள் வரை பற்றாக்குறை நிலவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரியை நீக்க வேண்டும் என்று தொடா்ந்து கோரிக்கை எழுந்த நிலையில் ஜூன் 1 முதல் அக்டோபா் 31 -ஆம் தேதி வரை இறக்குமதி வரி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒரு கேண்டி (355 கிலோ) பருத்தியின் விலை ரூ.54,500 -இல் இருந்து ரூ.71 ஆயிரமாக உயா்ந்திருந்த நிலையில் தற்போது விலை குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 2022, 2025-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதைப்போலவே தற்போதும் இறக்குமதி வரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பது பருத்தி ஜவுளிச் சங்கிலியில் இடம்பெற்றுள்ள அனைத்து தொழில்முனைவோருக்கும் உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இக்கட்டான சூழலில் இறக்குமதி வரியை தற்காலிகமாக ரத்து செய்த பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் நிா்மலா சீதாராமன், சிவராஜ் சிங் சௌஹான், பியூஸ் கோயல், கிரிராஜ் சிங் ஆகியோருக்கு சைமா நன்றி தெரிவித்துக்கொள்கிறது. அதேபோல, இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பிய முதல்வா் சி.ஜோசப் விஜய்க்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நடவடிக்கையால் இந்திய பருத்தி விலை சா்வதேச விலைக்கு நிகராக மாறும். இதன் மூலம் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் தங்களின் வா்த்தகப் போட்டியை தக்க வைத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments