FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மே.வங்கத்தில் லெனின் சிலை மர்மமான முறையில் அகற்றம்! சிவாஜி சிலை நிறுவப்படுமா?

மே.வங்கத்தில் உடைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலை மர்மமான முறையில் அகற்றப்பட்டுள்ளது குறித்து...

லெனின் சிலையானது மேடையில் இருந்து மர்ம நபர்களால் அகற்றப்பட்டுள்ளது...
பகிர்:

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அமைந்திருந்த புரட்சியாளர் விளாதிமீர் லெனின் சிலை மர்மமான முறையில் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஜியாஜங் ஸ்ரீபத் சிங் கல்லூரி முன்பு நிறுவப்பட்டிருந்த ரஷிய புரட்சியாளர் விளாதிமீர் லெனின் சிலை, கடந்த மே மாதம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்துக்கு, மேற்கு வங்கத்தில் புதியதாக ஆட்சி அமைத்துள்ள பாஜகதான் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், பாஜக தரப்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், உடைக்கப்பட்டிருந்த லெனின் சிலையானது வெள்ளிக்கிழமை (நவ. 6) நள்ளிரவு மர்ம நபர்களால் அங்கிருந்த அகற்றப்பட்டுள்ளது. இதுபற்றி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இதுவரையில் சிலையை அகற்றியது யார் என்பது தெரியவரவில்லை. ஆனால், பாஜக ஆட்சி அமைந்தது முதல் அங்கிருந்து லெனின் சிலை அகற்றப்பட்டு மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜியின் சிலை அமைக்கப்படும் எனச் செய்திகள் பரவி வந்தன.

கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போதைய சிபிஎம் தலைமையிலான மாநகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட லெனின் சிலையை, குடியரசுத் தலைவர் விருதுபெற்ற சிற்பி மிருகாங்க பால் வடிவமைத்து உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

summary

a statue of Lenin, located in the Murshidabad district of West Bengal, has been removed under mysterious circumstances.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.