பட்டாசு வெடிப்பதால் நோய்கள் குணமாகும்: பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்து!
பட்டாசு வெடிப்பதால் நோய்கள் குணமாகும் என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பாபியா அதிகாரி தெரிவித்திருப்பது குறித்து...
பட்டாசு வெடிப்பதால் நோய்கள் குணமாகும் என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பாபியா அதிகாரி பேசியுள்ளது சமூக ஊடகங்களில் சர்ச்சையாகி வருகிறது.
தீபாவளி பண்டிகை நேற்று (நவ. 9) கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், மேற்கு வங்கம், கொல்கத்தாவின் டோலிகஞ்ச் பகுதியில் நடைபெற்ற காளி பூஜை பந்தல் திறப்பு விழாவில் பாஜக எம்.எல்.ஏ. பாபியா அதிகாரி கலந்து கொண்டு பேசினார்.
அந்த நேரத்தில் அங்கு பலத்த சத்தத்துடன் பட்டாசு ஒன்று வெடித்தது. அப்போது அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
பட்டாசு வெடிப்பதால் பல நோய்கள் குணமாகும். எங்கள் முதல்வர் பட்டாசுகள் வெடிப்போம் என்று கூறியுள்ளார். பட்டாசுகள் இல்லாமல் காளி பூஜை எப்படி முழுமையடையும்? நாங்கள் நிச்சயமாக பட்டாசுகளை வெடிப்போம். இருப்பினும், காவல்துறையின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவோம்.
இதனிடையே, தீபாவளி நாளன்று பட்டாசு வெடிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகும் தில்லியின் பல பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால், அங்கு 5 ஆண்டுகளுக்கு இல்லாத அளவில் இந்தாண்டு காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.