கர்நாடக முதல்வர் சாமி தரிசனம்! வரிசையில் காத்திருந்த பக்தர்கள் செருப்பு வீச்சு!
கர்நாடக முதல்வர் சாமி தரிசனம் செய்தபோது வரிசையில் காத்திருந்த பக்தர்கள் செருப்பு வீசியதால் பரபரப்பு...
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த திரை மீது செருப்புகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசனம்பா கோயிலில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் அவரது மனைவியுடன் நேற்று தரிசனம் மேற்கொண்டார்.
அவரது வருகையையொட்டி, பொது தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு, அவர்கள் நிறுத்தப்பட்டனர்.
Advertisement
Advertisement
இதனால், பல மணிநேரங்களாக நீண்ட வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக பெண்கள், கடும் ஆத்திரமடைந்தனர்.
கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிகளில் முதல்வர் டி.கே. சிவகுமார் கோயிலின் கருவறைக்குள் அமர்ந்து தரிசனம் செய்து கொண்டிருந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த சில பக்தர்கள், தங்களின் காலணிகளை கழற்றி, முதல்வரின் காட்சிகள் ஒளிபரப்பப்பட்ட எல்.இ.டி. திரை மீது வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புகழ்பெற்ற ஹசனாம்பா கோயிலில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி முதல் ஹசனாம்பா திருவிழா நடைபெற்று வருகின்றது. இதுவரை மாநிலம் முழுவதிலும் இருந்து 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை விடுமுறை நாளான நேற்று, லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.