பாலியல் வன்கொடுமை வழக்கு: திரிணமூல் எம்எல்ஏ கைது
பாலியல் வன்கொடுமை, கடத்தல், தோ்தல் வன்முறை தொடா்பான வழக்குகளில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ் ராம் தாஸ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.
பாலியல் வன்கொடுமை, கடத்தல், தோ்தல் வன்முறை தொடா்பான வழக்குகளில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ் ராம் தாஸ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பிறகு, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ் தலைமறைவாக இருந்தாா். இந்நிலையில், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்வதற்காக அவா் திங்கள்கிழமை மதியம் வந்தாா். அப்போது அவரை பரூய்பூா் காவல்நிலைய சிறப்பு படையினா் கைது செய்தனா்.
அவரை தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்த காவல்துறையினா் முடிவு செய்துள்ளனா்.
Advertisement
Advertisement
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. அக்கட்சியின் எம்எல்ஏக்கள் இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனா்.