என்ன, நீதா அம்பானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் விலை ரூ.50 லட்சமா? உண்மை என்ன?
முகேஷ் அம்பானி மனைவி நீதா அம்பானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் விலை ரூ.50 லட்சமா என்பது பற்றி..
ஆக்வா டி கிறிஸ்டால்லோ என்ற நிறுவனத்தின் ஒரு தண்ணீர் பாட்டில் விலை ரூ.45 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விற்பனையாகும் நிலையில், இந்த தண்ணீரைத்தான் நாள்தோறும் நீதா அம்பானி குடித்து வருகிறார் என்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நாம் ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்து குடிநீர் பாட்டில் வாங்கிக் குடிப்போம். அதுவும் வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு போகாவிட்டாலோ, கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்துவிட்டாலோ, வீட்டுக்குச் செல்ல சற்று தாமதமாகலாம் என்றாலோதான். அதுபோல சில முன்னணி நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்கள் நட்சத்திர உணவகங்களில் சில நூறுகளில்கூட விற்பனை செய்யப்படும்.
Advertisement
Advertisement
உலகில் ரூ.50 லட்சம் மதிப்பில் ஒரு குடிநீர் பாட்டில் விற்கப்படுகிறது என்றால் நம்ப முடியுமா? இந்தியாவில் பல மனிதர்கள் தங்களது வாழ்நாள் முழுக்க ரூ.50 லட்சம் மதிப்பில் செலவிட்டு வாழ்ந்திருப்பார்களா? என்பதே சந்தேகம்தான்.
ஆக்வா டி கிறிஸ்டல்லோ நிறுவனத்தின் தங்க குடிநீர் பாட்டீல் தான் இந்த விலையில் விற்கப்படுகிறது. காரணம், இந்த குடிநீர் உலகின் மூன்று இடங்களிலிருந்து அதாவது ஃபிஜி, பிரான்ஸ், ஐஸ்லாந்து ஆகிய பகுதிகளிலிருந்து இயற்கையான நீரை சேகரித்து தயாரிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, இதில் 24 காரட் 5 மில்லிகிராம் தங்கமும் சேர்க்கப்படுமாம்.
இந்த குடிநீர் பாட்டில் தயாரிப்பிலும் தங்கம் சேர்க்கப்படுமாம். எனவேதான், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, இந்த குடிநீர் பாட்டிலை வாங்கி குடிப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவர் இந்த குடிநீர் பாட்டிலை கையில் வைத்திருப்பது போன்ற ஏஐ உருவாக்கிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஆனால், இதனை உறுதி செய்யும் வகையில் எந்த தகவலும் இல்லை. எனவே, நீதா அம்பானி இந்த குடிநீர் பாட்டில் நீரைத்தான் குடிக்கிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
உலக கின்னஸ் புத்தகத்திலும், மிக விலை உயர்ந்த குடிநீர் பாட்டில் என்று இந்த நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.