அந்த இன்னொரு நபரையும் அறிய காத்திருங்கள்! - அம்பானி பற்றிய எலான் மஸ்க்கின் பதிவுக்கு ராகுல் பதில்!
தொழிலதிபர் முகேஷ் அம்பானி பற்றிய எலான் மஸ்க்கின் பதிவுக்கு ராகுல் காந்தி பதில்...
தொழிலதிபர் முகேஷ் அம்பானி குறித்து எலான் மஸ்க் வெளியிட்ட பதிவுக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இணையதள சேவை வழங்கப்படுவதை முகேஷ் அம்பானி தடுத்து வருவதாக, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் குற்றஞ்சாட்டினார்.
இத்துடன், 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் நிறுவனம் உரிமம் பெற்றதுடன், இந்திய அரசின் ஒவ்வொரு விதிமுறையையும் பின்பற்றி வருகிறது எனவும், அம்பானிதான் இந்தியாவின் முதலாளியா எனவும் எலான் மஸ்க் இன்று (அக். 8) தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், எலான் மஸ்க்கின் பதிவைக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, அந்த இன்னொரு நபரையும் அறியும் வரையில் காத்திருங்கள் என எலான் மஸ்க்கிற்கு பதிலளித்துள்ளார்.
இதுபற்றி, ராகுல் வெளியிட்டுள்ள பதிவில்,
“இந்தியாவுக்கு உங்களை (எலான்) வரவேற்கிறோம்.
அந்த இன்னொரு நபரையும் அறியும் வரையில் நீங்கள் காத்திருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் எலான் மஸ்க்கின் பெயரைக் குறிப்பிடாத மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம், “இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் தவறானவை” என்று விளக்கமளித்து குற்றச்சாட்டை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Rahul Gandhi, has responded to a post by businessman Mukesh Ambani shared by Elon Musk.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.