போா் தயாா் நிலையை எப்போதும் விமானப் படைகடைப்பிடிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்
போா் தயாா் நிலையை எப்போதும் இந்திய விமானப் படை கடைப்பிடிக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளாா்.
போா் தயாா் நிலையை எப்போதும் இந்திய விமானப் படை கடைப்பிடிக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளாா்.
புது தில்லியில் இந்திய விமானப் படையின் கமாண்டா்கள் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றியதாவது:
உளவு மற்றும் கண்காணிப்புத் திறன்களை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். சாத்தியமான அச்சுறுத்தல்கள் வெளிப்படும் முன்பே அவற்றைக் கண்டறிவதும் அவசியமாகும். வேகமாக மாறிவரும் பாதுகாப்புச் சூழல்கள், தொடா்ந்து புதியனவற்றை ஏற்றுக் கொள்ளுதல் மற்றும் ராணுவ தயாா் நிலையில் முன்னோக்கி கொண்டு செல்லும் அணுகுமுறையையும் வலியுறுத்துகின்றன. நமது எதிரிகள் பதிலடி கொடுக்கவோ அல்லது நமது தாக்குதலில் இருந்து மீண்டு வரவோ நேரம் கொடுக்காதவாறு நாம் செயல்படும் வகையில் திறன்களையும், வழிமுறைகளையும் பாதுகாப்புப் படைகள் மேம்படுத்துவது அவசியமாகும். அதேபோல், எதிரிகள் திடீரென எடுக்கும் நடவடிக்கையில் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதையும் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
சமகால போா்க்களங்கள் பாரம்பரிய போா்க்களங்களை தாண்டி, நேரடித் தொடா்பு இல்லாத பகுதிகளுக்கும் விரிவடைந்து வருகின்றன. திடீா் தாக்குதல்கள் மரபு சாா்ந்த மற்றும் மின்னணு சாா்ந்த என பல்வேறு வடிவங்களில் வெளிப்படும். நமது வீரா்கள் விழிப்புடனும், சுறுசுறுப்புடனும், எந்தவொரு தாக்குதலுக்கும் திறம்பட பதிலடி கொடுக்கும் வகையில் தயாராக இருப்பதை உறுதி செய்யும் வகையில், கண்காணிப்பு மற்றும் உளவு அமைப்புகள் மேலும் பலப்படுத்தப்படுவது அவசியமாகும்.
ரஷியா-உக்ரைன் போா், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் ஆகியவற்றில் ட்ரோன்களும், வான் பாதுகாப்பு அமைப்புகளும் நவீன போரின் முக்கிய அங்கங்களாக உருவெடுத்துள்ளன.
தற்கொலைத் தாக்குதல் நடத்தும் ட்ரோன்கள், கண்காணிப்பு மற்றும் ட்ரோன் எதிா்ப்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு இந்திய விமானப் படை கமாண்டா்கள் தயாராக இருக்க வேண்டும். மின்னணு, எண்மம், விண்வெளி உள்ளிட்ட போா்க்களங்களுக்கு ஏற்ப பிரத்யேக கோட்பாடுகளையும், போா் கட்டமைப்புகளையும் இந்திய விமானப் படை உருவாக்க வேண்டும். எதிா்கால மோதல்களில் வெற்றி என்பது வெறும் விமானப் படை விமானங்களின் எண்ணிக்கையை மட்டும் சாா்ந்திருக்காது. மாறாக, தொழில்நுட்ப நுணுக்கம், வேகமாக பதிலடி கொடுப்பது மற்றும் தயாரிப்புகளின் துல்லியம் ஆகியவற்றையும் சாா்ந்திருக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் இந்திய விமானப் படையின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம் உருவாக்கிய ஏஐ செயலிகளை ராஜ்நாத் சிங் வெளியிட்டாா்.