மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் யார் வேண்டுமானாலும் கண்டிக்கட்டும், அதைப் பற்றி கவலையில்லை என டி.கே. சிவகுமார் பேசியது குறித்து...
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் யார் வேண்டுமானாலும் கண்டிக்கட்டும், அதைப் பற்றி கவலையில்லை என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் சனிக்கிழமை (நவ. 14) தெரிவித்தார்.
மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என அண்மையில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, டி.கே. சிவகுமாரின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் டி.கே. சிவகுமார் பேசியதாவது:
யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும்; எனக்கு அதைப்பற்றி சிறிதும் கவலையில்லை. தமிழக அரசு ஒரு குழுவுடன் கர்நாடகத்துக்கு வர வேண்டும். அவர்களுக்கு இந்த அணை எவ்வளவு பயனுள்ளது என்பதை நான் காட்டுகிறேன்.
மற்றபடி, எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இது அங்கு (தமிழகத்தில்) நடக்கும் அரசியல். ஒருவேளை காங்கிரஸ் கண்டிக்காவிட்டால் திமுக கண்டித்திருக்கும். திமுக கண்டிக்காவிட்டால் அதிமுக கண்டிக்கும். இதன் பின்னர் அனைவரும் கண்டிக்கலாம். ஆனால், நாட்டின் சட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு 177 டிஎம்சி தண்ணீருக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. அவர்களின் உரிமையைப் பாதுகாப்பது எங்களது கடமை. அணையைக் கட்டி தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவது எங்களது உரிமை என்று டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.