FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சபரிமலை யாத்திரைக் கால தூய்மைக்கான 'நிர்மலம் சபரிமலை' பிரசாரம் தொடங்கியது!

'நிர்மலம் சபரிமலை' என்ற சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது குறித்து...

சபரிமலை கோயில் - ANI
பகிர்:

திருவனந்தபுரம்: ஆண்டுதோறும் நடைபெறும் சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு யாத்திரைக் காலத்தைத் ​​தூய்மையாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கேரள உள்ளாட்சித்துறை கீழ் செயல்படும் சுசித்வா மிஷன் சார்பில் 'நிர்மலம் சபரிமலை' என்ற சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணர்வுச் செய்திகள் நான்கு மொழிகளில் வெளியிடப்படுவதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.எம். ஷாஜி, சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விழிப்புணர்வு காணொளி மற்றும் பன்மொழி சுவரொட்டிகளை வெளியிட்டு பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

கேரளம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்களைச் சென்றடையும் வகையில், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்ட விளம்பரச் சுவரொட்டிகளை அவர் வெளியிட்டார்.

'சுசித்வா மிஷன்' மூலம் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பிரசாரம், சபரிமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களிடையே தூய்மையைப் பேணுதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொறுப்புணர்வுடன் செயல்படுதல் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் ஷாஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முக்கிய யாத்திரைப் பாதைகளில், தூய்மை குறித்த செய்திகளைக் கொண்ட பல மொழி விழிப்புணர்வுப் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும்,

துணிப்பைகளை விநியோகிப்பதற்காகச் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; மேலும், குப்பைத் தொட்டிகளிலிருந்து கழிவுகளை முறையாகச் சேகரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாத்திரைப் பாதைகளிலும், பம்பை மற்றும் சன்னிதானம் ஆகிய இடங்களிலும் குப்பைகளை வீச வேண்டாம் என்றும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு பதிலாகத் துணிப்பைகள் போன்ற மறுபயன்பாட்டுப் பொருள்களை பயன்படுத்துமாறும் பக்தர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

வனப்பகுதிகளையும் வனவிலங்குகளையும் பாதுகாத்தல் அவசியம், தூய்மைப் பணிகளுக்கான ஹரித கர்மா சேனா தன்னாப்வலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைப்பு இதில் முக்கிய பங்கு வகுக்கின்றன.

ஆன்லைன் மெய்நிகர் வரிசை முறை மூலம் பதிவு செய்யும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு காணொளிகள் அனுப்பப்படும்.

டிஜிட்டல் தளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் பிற விளம்பர ஊடகங்கள் வாயிலாக, பல்வேறு மொழிகளில் இந்த தூய்மை விழிப்புணர்வுச் செய்திகள் கொண்டு சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சபரிமலை யாத்திரைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள கேரளம் மற்றும் பிற மாநிலங்களின் அரசு அமைப்புகள் மற்றும் துறைகளுடன் இணைந்து இந்தப் பிரசார நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-27 ஆம் ஆண்டுக்கான சபரிமலை யாத்திரை காலம் நவம்பர் 17-ஆம் தேதி தொடங்குகிறது; பக்தர்கள் நவம்பர் 16-ஆம் தேதியிலிருந்தே ஐயப்பன் கோயிலுக்கு வரத் தொடங்குவார்கள்.

The Local Self-Government Department has launched the 'Nirmalam Sabarimala' campaign to promote cleanliness and environmental protection during the annual pilgrimage season...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.