FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பழங்குடியினர் கெளரவ நாள்: பிர்ஸா முண்டாவின் படத்துக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் மரியாதை!

பிர்ஸா முண்டாவின் படத்துக்கு பிரதமர், குடியரசுத்தலைவர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தியது குறித்து...

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர். - படம் - பிடிஐ
பகிர்:

பழங்குடியினர் கெளரவ நாளை முய்ன்னிட்டு,பிர்ஸா முண்டாவின் படத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியினத் தலைவருமான பிர்ஸா முண்டாவின் 151-ஆவது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) கொண்டாடப்படுகிறது. பிர்ஸா முண்டாவின் பிறந்த நாள், பழங்குடியினர் கெளரவ நாளாகக் கடந்த 2021-இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இதைத் தொடர்ந்து, பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் பழங்குடியினக் கலைஞர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத்தலைவர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பழங்குடியின மக்களின் இசைக்கருவியை பிரதமர் மோடி வாசித்தார்.

மேலும், இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் பங்குபெற்றனர்.

இந்த நிலையில், பழங்குடியினர் கெளரவநாளை முன்னிட்டு, ரூ. 3,000 கோடி மதிப்பீட்டிலான 246 பழங்குடியினர் நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

On the occasion of Tribal Pride Day, Prime Minister Narendra Modi, President Droupadi Murmu, and others paid floral tributes to a portrait of Birsa Munda.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.